News
அந்த நிலைல எங்கப்பாவை யாரும் பார்க்க கூடாதுன்னு நினைச்சேன்!.. ரஜினிகாந்தின் போட்டோவில் மனம் வருந்திய மகள்!..
Aishwarya Rajinikanth: தமிழ் சினிமாவில் எப்போதுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தின் பெருமைக்காகவே தொடர்ந்து அவர் நடித்து வருகின்றார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் 70 வயதிற்கு மேலாகியும் இன்னும் இப்படி ஒரு ஹீரோ அந்தஸ்தில் இருக்கிறார் என்றால் அது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவர் மட்டும்தான். இனி வரும் இளைய நடிகர்கள் வேண்டுமானால் அவர்களைப் போலவே வயதான பிறகும் கதாநாயகனாக நடிக்கலாம்.

ஆனால் இவர்களுக்கு முன்பு இருந்த சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இத்தனை வயது வரை கதாநாயகனாக நடிக்கவில்லை. ரஜினிகாந்த் எப்போதும் தன்னுடைய உண்மை நிலையை மக்கள் மத்தியில் காண்பிக்க கூடியவர்.
விஜய் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் தங்களுடைய நரைமுடியை வெளியில் காட்டுவதற்கே பயப்படும் பொழுது ரஜினிகாந்த் தன்னுடைய உண்மையான தோற்றத்தில்தான் அனைத்து விழாக்களுக்குமே வருவார். அதைப் பலரும் பார்த்திருப்போம் இந்த நிலையில் போன வருடம் மே மாதம் ரஜினியின் உடல் நிலையில் சில பிரச்சனைகள் இருந்தன அப்பொழுது அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தான் அவரைப் பார்த்துக் கொண்டார்.
கவலைப்பட்ட மகள்:
இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கும் முன்பு ரஜினிகாந்த் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினிகாந்த் வீல் சேர் ஒன்றில் அமர்ந்திருப்பார். அதில் தனது தாய்க்கு இணையானவர் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என எழுதியிருந்தார் ரஜினி.
இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்பொழுது அந்த ஒரு பதிவிற்கு என்ன பதில் கூறுவதென்று எனக்கு தெரியவில்லை. முதலில் எனக்கு எனது தந்தையை மற்றவர்கள் இப்படி வீழ் சேரில் பார்க்கக் கூடாது என்றுதான் நான் விரும்பினேன்.

என்றுமே ரஜினிகாந்தை ஒரு திடமான மனிதராகத்தான் மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது தந்தைக்கு அப்படி எல்லாம் எண்ணமில்லை அவரை பொறுத்தவரை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவர் மக்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்.
இருந்தாலும் எனக்கு அந்த பதிவு போட்ட பொழுது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் என்னை தாய் என்று கூறியிருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியும் கொடுத்தது. அதனால் அந்த பதிவிற்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
