Connect with us

என் முதல் கதையை எடுத்து படமாக்கிட்டாங்க!.. விருப்பம் இல்லாமல்தான் சூர்யா படம் பண்ணுனேன்!.. மனம் திறந்த அமீர்!.

ameer

Cinema History

என் முதல் கதையை எடுத்து படமாக்கிட்டாங்க!.. விருப்பம் இல்லாமல்தான் சூர்யா படம் பண்ணுனேன்!.. மனம் திறந்த அமீர்!.

Social Media Bar

Director Ameer : தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தற்சமயம் பேசுபொருளாக இருந்து வருபவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்கள் தான் என்றாலும் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை கடந்த இரண்டு வாரங்களாக பெரும் பிரச்சனையாக சென்று கொண்டுள்ளது.

முதல் படம் எடுப்பதில் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அமீர். அதில் அவர் கூறும் பொழுது முதலில் காதல் படம் எடுப்பதற்கு எனக்கு எந்த ஒரு விருப்பமுமே கிடையாது. குற்றவாளி என்கிற ஒரு திரைப்படத்தின் கதையைதான் நான் எழுதி வைத்திருந்தேன்.

அதன் கதைப்படி மதுரையில் குற்றங்கள் எப்படி நடக்கின்றன ஒரு குற்றவாளி எப்படி உருவாகிறான் என்பதை சொல்லும் விதமாக அந்த கதையை எழுதினேன். அதில் ஒரு பாடல் கூட நான் வைக்கவில்லை. ஆனால் எந்த தயாரிப்பாளரும் அந்த கதையை ஒப்புக்கொள்ளவில்லை.

காதல் தொடர்பான கதையை சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம் என கூறியதால் எனது முதல் படத்தை காதல் படமாக அமைத்தேன். எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட அந்த படத்திற்கு அனைவரது மத்தியிலும் வரவேற்பு இருந்ததால் அதையே நான் படமாக்கினேன்.

பிறகு இரண்டாவதாக ராம் திரைப்படத்தை இயக்கினேன். ராம் படத்தை இயக்கும் பொழுதும் ஒரு 12 வயது சிறுவனாக தான் கதாநாயகனை வைக்க இருந்தேன். ஆனால் என்னுடைய உதவி இயக்குனர் சசிகுமார் அந்த மாதிரி வைத்தால் படம் ஓடாது என்று கூறியதால் ஜீவாவை கதாநாயகனாக வைத்தேன.

அதற்குப் பிறகுதான் சொந்த தயாரிப்பில் யாருடைய இடையூறும் இல்லாமல் ஒரு முழு படைப்பாக எனக்கு பிடித்த மாதிரி படத்தை எடுக்க வேண்டும் என்று பருத்தி வீரன் திரைப்படத்தை எடுத்தேன். என்று கூறியிருக்கிறார் மேலும் அவர் கூறும் பொழுது ஏன் குற்றவாளி படத்தை எடுக்கவில்லை என்பது குறித்தும் கூறியிருந்தார்.

அதாவது குற்றவாளி கதையின் மையக்கருத்தை எடுத்துக் கொண்டு ஏற்கனவே நாடோடிகள் சுப்பிரமணியபுரம் போன்ற திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. அதற்குப் பிறகு திரும்ப குற்றவாளி திரைப்படத்தை எடுப்பது சரியாக இருக்காது என்று நினைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஏன் உங்களது கதையை அவர்கள் படமாக்கினார்கள் என்று நீங்கள் கேட்கவில்லையா என்று அமீரிடம் கேட்கும் பொழுது இதை கதை திருட்டு என்று கூற முடியாது. அவர்கள் ஒட்டுமொத்தமாக கதையவே மாற்றி இருந்தார்கள் அதன் பின்புலம் மட்டும்தான் என்னுடைய கதையோடு சாயலாக இருந்தது என்று கூறி இருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top