Connect with us

நான் சொல்ற மாதிரி நடிக்க தெரியாதா உனக்கு? – நாசரை திட்டிய பாலசந்தர்!

Cinema History

நான் சொல்ற மாதிரி நடிக்க தெரியாதா உனக்கு? – நாசரை திட்டிய பாலசந்தர்!

Social Media Bar

சினிமாவிற்கு நடிக்க வரும் புதிதில் அனைவரிடமும் நட்சத்திரங்கள் திட்டு வாங்குவது என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் நடிகர் நாசருக்கும் அந்த மாதிரியான அனுபவங்கள் நடிகர் நாசருக்கும் உண்டு.

நாசர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான். சினிமாவின் மேல் பெரிதாக நாட்டம் எதுவும் இல்லாமல் இருந்தார். அவரது ஆசை எல்லாம் ஒரு மாத வருமானம் வரக்கூடிய வேலையை பெற வேண்டும் என்பதே. ஆனால் அவரது தந்தை நாசர் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார்.

இதனால் நாசரும் சினிமா துறையில் முயற்சித்து வந்தார். அப்போது பாலச்சந்தர் இயக்கிய கல்யாண அகதிகள் என்கிற திரைப்படத்தில் நாசருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் நாசர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருந்தது.

அந்த காட்சியில் மிகவும் மேம்போக்காக சிகரெட்டை பிடித்தார் நாசர். இதை பார்த்ததும் கோபமாகிவிட்டார் பாலசந்தர். உனக்கு ஒரு சிகரெட் கூட பிடிக்க தெரியாதா என கேட்டார். உடனே நாசர் சார் எனக்கு சிகரெட் பிடித்து பழக்கமில்லை சார் என கூறியுள்ளார்.

பிறகு சிகரெட்டை வாங்கிய பாலசந்தர் தனது வாயில் வைத்து நன்றாக இழுத்து விட்டார். பிறகு நாசரிடம் நான் இழுத்தது போல இழுத்து விடு. உன் கதாபாத்திரத்தின் பலமானது நீ சிகரெட் இழுத்து விடுவதில் கூட எதிரொளிக்க வேண்டும் என கூறி சென்றுள்ளார்.

அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக இயக்கும் இயக்குனராக பாலசந்தர் இருந்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
To Top