Connect with us

என்னைய பார்த்தா எப்படி தெரியுது!.. நீ சொல்றதை நான் நம்பணுமா?.. கமல் படத்தை பார்த்து இயக்குனரிடம் கடுப்பான பாரதிராஜா!.

kamalhaasan bharathiraja

Cinema History

என்னைய பார்த்தா எப்படி தெரியுது!.. நீ சொல்றதை நான் நம்பணுமா?.. கமல் படத்தை பார்த்து இயக்குனரிடம் கடுப்பான பாரதிராஜா!.

Social Media Bar

தமிழில் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் எனலாம்.

அதற்கு பிறகு தமிழில் அறிமுகமான பல இயக்குனர்களுக்கும் இயக்குனர் பாரதிராஜா மீது அதிக மரியாதை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

Bharathiraja-6
Bharathiraja-6

முதல் படமாக அவர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு சத்யா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

பாரதிராஜா கேட்ட கேள்வி:

இந்த நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக இயக்குனர் பாரதிராஜா திரையரங்கிற்கு சென்றிருந்தார். திரையரங்கில் படத்தை பார்க்கும்போது பாரதிராஜாவிற்கே மிகவும் ஆச்சரியமாக இருந்துள்ளது.

பிறகு படம் முடிந்து வெளியே வந்த பாரதிராஜா சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து இதை உன் முதல் படம்னு என்னை நம்ப சொல்றியா என கேட்டுள்ளார். இதனை ஒரு பேட்டியில் கூறும் சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானப்போது இங்கு யாரையுமே எனக்கு தெரியாது.

ஆனால் பாரதிராஜாவின் படங்களை அப்போதே பார்த்திருந்தேன். அதனால் அவர் மீது பெரு மதிப்பு கொண்டிருந்தேன். அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என நான் இருந்தப்போது எனது முதல் படத்திற்கே பாரதிராஜா பெரிய அங்கீகாரத்தை வழங்கினார். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top