அவர் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே?.. ரோபோ சங்கர் மாமனாரிடம் சிக்கிய இயக்குனர்!..

Director Gokul: தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதுமையான திரைப்படங்களை எடுத்தும் கூட அதிகமாக பேசப்படாமல் இருக்கும் ஒரு இயக்குனராக இயக்குனர் கோகுல் இருக்கிறார். 2011 இல் இவர் முதன் முதலாக ரௌத்திரம் திரைப்படத்தை இயக்கினார்.

அந்த திரைப்படத்திற்கு அப்போதே நல்ல வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து அவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா. விஜய் சேதுபதிக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் இது.

அதன் பிறகு அவர் இயக்கிய காஷ்மோரா ஜுங்கா மாதிரியான திரைப்படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. ஆனாலும் கூட மக்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படங்களாக இவை இருந்தன. இந்த நிலையில் தற்சமயம் ஆர்.ஜே பாலாஜியை கதாநாயகனாக கொண்டு சிங்கப்பூர் சலூன் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் கோகுல்.

Kasthuri, Meera Mitun, Robo Shankar And Others At The Humanitarian Awards Ceremony
Social Media Bar

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நடிகர் ரோபோ சங்கரும் கலந்துக்கொண்டார். இயக்குனர் கோகுலின் படங்களில் ரோபோ சங்கரும் நடித்து வருகிறார். முக்கியமாக கோகுலின் முதல் படமான ரௌத்திரம் திரைப்படத்திலும் கூட ரோபோ சங்கர் நடித்திருந்தார்.

ஆனால் இறுதியில் எடிட்டிங்கில் ரோபோ சங்கரின் பெரும்பாலான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் படம் வெளியான பிறகு ஒரு நாள் விஷேசத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக ரோபோ சங்கரை பார்க்க வந்துள்ளார் கோகுல்.

அப்போது அவரை இடை மறைத்த ரோபோ சங்கரின் மாமனார், நீதான் அந்த இயக்குனரா, உன்னால ஒரு வருசமா அவன் தாடியை வளர்த்துக்கிட்டு சுத்திகிட்டு இருந்தான். கடைசில அவன் வாழ்க்கையை கெடுத்துட்ட என பேசியுள்ளார். இதனால் குற்ற உணர்ச்சி அடைந்த இயக்குனர் கோகுல் அடுத்து இயக்கிய இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார்.