இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் தனி ஒருவன்!- என்ன கதை தெரியுமா?

2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தனி ஒருவன். வழக்கமான போலீஸ் திரைப்படங்கள் போல பல பேரை ஹீரோ அடித்து பறக்கவிடுவது போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் உருவான திரைப்படம் தனி ஒருவன்.

Social Media Bar

மேலும் இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்ததும் படத்திற்கு முக்கியமான வரவேற்பை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்தது. இயக்குனர் மோகன் ராஜா இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதனை அடுத்து தற்சமயம் தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தைகள் சென்றுக்கொண்டுள்ளன.

தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ராஜா இதுக்குறித்து ஜெயம் ரவியிடம் பேசி வருகிறாராம். இந்த படத்தையும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுதான் இயக்க இருக்கிறார் இயக்குனர். தனி ஒருவன் திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் இசை பெரும் உதவியாக இருந்தது.

எனவே இந்த திரைப்படத்திற்கும் அவரையே இசையமைக்க சொல்லலாம் என பேச்சுக்கள் உள்ளன. ஆனால் போன படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக இருந்தார். இந்த முறை அதே போல தமிழில் உள்ள முக்கியமான நட்சத்திரத்தைதான் கதாநாயகனாக இறக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர்.