Connect with us

இவரை வச்சி எல்லாம் என்னால் படம் பண்ண முடியாது!. எம்.ஜி.ஆர் செயலால் கடுப்பான இயக்குனர்… காப்பாற்றிய ட்ரைவர்!.. என்ன ஆனது!.

MGR pa neelakandan

Cinema History

இவரை வச்சி எல்லாம் என்னால் படம் பண்ண முடியாது!. எம்.ஜி.ஆர் செயலால் கடுப்பான இயக்குனர்… காப்பாற்றிய ட்ரைவர்!.. என்ன ஆனது!.

Social Media Bar

Puratchi Thalaivar MGR : தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து ஒரு மனிதன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது என்பது சாதாரண விஷயமல்ல. சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த பிரபலமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

சினிமாவில் எம்.ஜி.ஆரை பற்றி பலரும் கூறும்போது எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தை பொறுத்தவரை அதில் அவர்தான் எல்லாமே. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் முதல் காட்சிகள், பாடல்கள், பாடல் வரிகள் என அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு பிடித்த விதத்தில்தான் இருக்க வேண்டும்.

mgr (1)
mgr (1)

இந்த நிலையில் இயக்குனர் பா.நீலக்கண்டன் எம்.ஜி.ஆரை வைத்து சக்கரவர்த்தி திருமகள் என்னும் படத்தை எடுத்து வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆர் படத்தில் இப்படியெல்லாம் இருக்கும் என்று தெரியாது. எனவே ஒரு காட்சிக்காக அனைத்து விஷயங்களையும் தயார் செய்து வைத்துவிட்டு எம்.ஜி.ஆருக்காக காத்திருந்தார் இயக்குனர்.

அங்கு வந்த எம்.ஜி.ஆருக்கு அந்த செட்டப் அவ்வளவு திருப்தியாக இல்லை. எனவே இயக்குனரை அழைத்து அந்த செட்டை அவருக்கு பிடித்த மாதிரி மாற்ற சொன்னார். மேக்கப்பை முடித்துவிட்டு வருவதற்குள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என கூறிவிட்டு எம்.ஜி.ஆர் சென்றார்.

அதை கேட்டதும் இயக்குனருக்கு கடுமையான கோபம் வந்தது. வேகமாக படப்பிடிப்பில் இருந்து கிளம்பினார். ஆனால் அந்த நேரம் அவரது ட்ரைவர் அங்கு இல்லை. அதனால் அவருக்காக காத்திருந்தார் நீலக்கண்டன். அப்போது அங்கு வந்த படக்குழுவினர். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர், அவரை எதிர்த்துக்கொண்டால் சினிமாவில் அடுத்த படங்கள் எடுக்க முடியாது என விவரமாக கூறியப்பிறகு நீலக்கண்டன் அந்த படத்தை முடித்து கொடுத்துள்ளார்.

அதற்கு பிறகு எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பானது. இருவரது காம்போவில் பல படங்கள் வந்தன. அன்று மட்டும் அந்த ட்ரைவர் இருந்திருந்தால் இது எல்லாமே நடக்காமல் போயிருக்கும்.

To Top