Connect with us

சிறை கைதிகளுக்காக மடிப்பிச்சை ஏந்திய பார்த்திபன் – வைரலாகும் வீடியோ!

Latest News

சிறை கைதிகளுக்காக மடிப்பிச்சை ஏந்திய பார்த்திபன் – வைரலாகும் வீடியோ!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமா துறையில் ஒரு மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைக்கும் ஒரு சில இயக்குனர்களில் பார்த்திபனும் முக்கியமானவர். இவரது சில படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை தரவில்லை என்றாலும் கூட தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் திரைப்படங்களில் இருந்து மாறுப்பட்டு இருப்பதை காணலாம்.

மேலும் சமூகம் சார்ந்த விஷயங்களில் மிகவும் முனைப்போடு செயல்ப்பட கூடியவர் பார்த்திபன். இந்த நிலையில் தற்சமயம் சென்னையில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு பார்த்திபன் சென்றுள்ளார்.

இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு விஷயத்தை புதிதாக செய்திருந்தனர். காவலர்கள் சிறை கைதிகளுக்காக புத்தகங்களை சேகரிக்கும் பணியை செய்து வந்தனர். இதற்காக புத்தகங்களை வாங்குபவர்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது ஏற்கனவே உபயோகித்த புத்தகத்தை இங்கு பரிசளிக்கலாம்.

இந்த நிலையில் புத்தக அரங்கிற்கு வந்த பார்த்திபன் ஒவ்வொரு அரங்காக சென்று அய்யா கைதிகளுக்கு ஏதாவது புத்தகம் இருந்தால் கொடுங்கள் ஐயா என மடி பிச்சை எடுத்துள்ளார். ஒவ்வொரு பதிப்பகமும் இதற்காக ஒரு புத்தகத்தை கொடுத்துள்ளது. தற்சமயம் இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

POPULAR POSTS

jayam ravi fan
cook with comali season 4 cook list
mohan g dry ice
murali
lingusamy rajinikanth
vishal
To Top