ஆர் ஆர் ஆர் 2 கன்ஃபார்ம்.. மூணாவதா ஒருத்தரை சேத்துருக்கேன் – திடீர் தகவல் வெளியிட்ட ராஜமெளலி

தென்னிந்திய சினிமாவில் இந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமாக ஓடி வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் உள்ளது.

தென்னிந்தியாவின் பெரும் வெற்றி இயக்குனர் ராஜமெளலியின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவானது. உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.

உலகம் முழுவதும் பல முக்கிய பிரபலங்கள் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை புகழ்ந்து பேசி இருந்தனர். இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் குறித்து ராஜமெளலி ஒரு பேட்டியில் பேசியபோது அவரிடம் ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் பாகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என கேட்கப்பட்டது.

அதற்கு ராஜமெளலி பதிலளிக்கும்போது ”அதில் பணிப்புரிந்த நட்சத்திரங்கள் அனைவரும் தற்சமயம் மிகவும் பிஸியாக இருக்கின்றனர். ஆனால் எனக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை எடுக்க ஆசை உண்டு. எனது தந்தை ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதிக்கொண்டுள்ளார்.” என கூறியுள்ளார்.

ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அதிகமாக இதிகாசங்களை படிப்பவர் என்பதால் அதன் சாயலை நாம் திரைப்படங்களில் பார்க்க முடியும். தற்சமயம அவர் எழுதும் இரண்டாம் பாகத்தில், புதிதாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இணைத்துள்ளாராம்.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் மகேஷ் பாபுவை கேட்கலாம் என ஒரு பேச்சு போய்க்கொண்டுள்ளதாம். எனவே ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது.

Refresh