ரெண்டு தடவை படமாக்கப்பட்ட காதலிக்க நேரமில்லை? – இதுதான் காரணமாம்!

1964 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை.

இப்போதைய காலக்கட்டத்தில் கூட பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்ட திரைப்படம். இந்த திரைப்படத்தை படமாக்க நினைத்தபோது இயக்குனர் ஸ்ரீதர் வேறு கதையைதான் வைத்திருந்தாராம்.

சிறிது படமாக்கி பார்த்த பிறகு அந்த படம் அவ்வளவாக ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் மொத்த கதையையும் மாற்றினாராம் ஸ்ரீதர். கதையை மாற்றியது முதல் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தாராம் ஸ்ரீதர்.

படத்தில் பூஜை போடுவதில் துவங்கி பாடல் எடுப்பது வரை பல விஷயங்கள் சரியில்லாமல் ஆனது. இதனால் சகுனம் பார்த்த உதவி இயக்குனர் பழைய கதையையே படமாக்கலாம் என ஸ்ரீதரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் ஸ்ரீதருக்கு பழைய கதையின் மீது ஈடுபாடு இல்லாத காரணத்தால் புது கதையையே திரைப்படமாக்கினார். ஆனால் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த புது கதைதான் பயங்கரமான வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

Refresh