Connect with us

15 லட்சம்தான் பட்ஜெட் அதுக்குள்ள படம் எடுக்கணும்!.. விசுவிற்கு தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!.

visu

Tamil Cinema News

15 லட்சம்தான் பட்ஜெட் அதுக்குள்ள படம் எடுக்கணும்!.. விசுவிற்கு தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!.

Social Media Bar

தமிழ் சினிமா கடைசி 20 வருடங்களில்தான் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதற்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கோடிகளில் படம் எடுப்பது என்பது அரிதான விஷயமாக இருந்து வந்தது.

அந்த காலகட்டங்களில் ரஜினி கமல் போன்ற நடிகர்களே லட்சங்களில்தான் சம்பளம் வாங்கி வந்தனர். பிரியா திரைப்படத்தின் போது தான் முதன்முதலாக ரஜினிகாந்த் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியதாக அவரை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாகதான் முன்னேறி வந்தது. அப்போதைய காலகட்டங்களில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் இயக்குனர் விசுவும் முக்கியமானவர். விசு நிறைய படங்களை இயக்கியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்த நிலையில் அவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் தேசிய விருதை பெற்றது. ஆனால் அந்த படத்திற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. அந்த திரைப்படத்தை விசு இயக்கும்போது தயாரிப்பாளர் அந்த படத்திற்கு அதிக பட்ஜெட் ஒதுக்க முடியாது என கூறினார்.

மொத்தமே 15 லட்சம் தான் இந்த படத்திற்கான பட்ஜெட் அதற்குள் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் படத்தில் நிறைய நடிகர்களை நடிக்க வைப்பதால் எப்படியும் சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கும் என்று யோசித்தார் விசு. இருந்தாலும் எளிமையான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அந்த வீட்டில் படப்பிடிப்பை நடத்தி 15 லட்சத்திற்குள் அந்த படத்தை எடுத்து முடித்தார் விசு. யாரும் எதிர்பாராத வகையில் பெரும் வெற்றியை கொடுத்தது அந்த திரைப்படம்.

To Top