News
சொந்த வாழ்க்கையே கிடையாதாடா உனக்கு? இர்ஃபான் பண்ணுன தப்பால் குழந்தைக்கு பின் விளைவு… உண்மையை கூறிய மருத்துவர்.!
பொதுவாகவே தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு யூ ட்யூபராக இருந்து வருபவர் இர்ஃபான். ஆரம்பத்தில் உணவுகள் குறித்து விமர்சனங்களை வழங்கி வந்த இர்ஃபான் பிறகு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அதிகமாக வீடியோ எடுத்து போடத் தொடங்கினார்.
இப்படியாக அவர் போடும் நிறைய வீடியோக்கள் ஏற்கனவே சர்ச்சையாகி இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தனது குழந்தை பிறந்ததை அவர் வீடியோ பதிவாக போட்டிருந்தார், அதில் குழந்தைக்கு தொப்புள் கொடி வெட்டுவதை ஒரு வீடியோவாக போட்டிருந்தார்.
இது மிகவும் சர்ச்சையாகி இருக்கிறது. மருத்துவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறும் பொழுது முதலில் குழந்தைக்கு தொப்புள் கொடி வெட்டும் இடத்தில் மற்றவர்களை அனுமதிக்கவே கூடாது.
இர்ஃபான் செய்த தவறு:
ஆனால் இவர் கேமரா செட்டப் லைட் என்று எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்குள் சென்று இருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் சொந்த விஷயம் என்று ஒரு விஷயத்தை வைத்துக் கொள்ள மாட்டீர்களா? பொதுவாக பிரசவ வார்டு மற்றும் குழந்தைகள் பிறக்கும் இடங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
கிருமிகளே இல்லாத இடமாக அதை வைத்து இருப்பார்கள். மருத்துவர்கள் கூட அங்கு மாஸ் க்மற்றும் கையுறைகள் போன்றவற்றை போட்டுக் கொண்டுதான் அனைத்தையும் செய்வார்கள். ஆனால் இர்ஃபான் கையில் ஒரு கையுறை கூட போடாமல் அந்தத் தொப்புள் கொடியை வெட்டி இருக்கிறார்.
தொப்புள் கொடியை சரியான இடத்தில் முதலில் வெட்ட வேண்டும் கொஞ்சம் முன்பே அதை வெட்டி விட்டால் கூட குழந்தைக்கு அதிகமாக ரத்தம் வர துவங்கிவிடும். இப்படி நிறைய சிக்கல்கள் தொப்புள் கொடி வெட்டுவதில்லையே இருக்கிறது.
அதையும் தாண்டி இர்ஃபான் மாதிரியான சமூக பிரபலமாக இருக்கும் ஒருவர் இப்படியான ஒரு செயலை செய்யும் பொழுது அடுத்து மற்ற யூடியூபர்களும் இதை செய்ய துவங்குவார்கள் இது மிகப்பெரிய பிரச்சனையாக தான் மாறும் என்று கூறியிருக்கிறார் அந்த மருத்துவர். மேலும் இர்ஃபான் தொடர்ந்து மக்களுக்கு தவறான உதாரணமாகதான் மாறி வருகிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.
