News
உயிருக்கு ஆபத்தான முடிவை எடுத்த இந்தியர்கள்.. ட்ரம்ப் அறிவித்த புதிய விதிமுறையால் சிக்கல்.!
பொதுவாகவே மக்களுக்கு தங்களுக்கு சொந்த நிலத்தை தாண்டி இன்னொரு இடத்திற்கு மாறுவது பிடித்த விஷயமாக இருக்கிறது. அப்படியாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கு இந்தியர்கள் வாழும் ஒரு பகுதியை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மோகம் என்பது உலக அளவில் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.
தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களை பார்க்கும் பலரும் அமெரிக்காவை ஒரு சொர்க்கம் போல நினைக்கின்றனர். அதனால் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆக வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி அமெரிக்கா சென்று செட்டில் ஆனவர்கள் பலர் உண்டு.
இந்த நிலையில் தற்சமயம் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபரான பிறகு ட்ரம்ப் கொண்டு வர இருக்கும் விதிமுறைகள் பலவும் அமெரிக்க மக்காளாலேயே ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் புது விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு பிறப்பால் மட்டுமே அமெரிக்க குடிமகனாகும் விதிமுறையை நீக்குகிறார் ட்ரம்ப்.
இப்போது சிக்கல் என்னவென்றால் 7 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறப்பதால் அமெரிக்க குடி மகனாக / குடி மகளாக ஆவார்கள்.
அதனால் அவர்களது பெற்றோர்களும் அமெரிக்க பிரஜையாக ஆக முடியும். ஆனால் ட்ரம்பின் புது சட்டத்தால் அது நடக்காமல் போய்விடும். மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீண்டும் இந்தியா வர வேண்டிய சூழல் ஏற்படும்.
எனவே தற்சமயம் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் எல்லாம் சிசேரியன் முறையில் 19 தேதிக்கு முன்பாகவே குழந்தையை பிறக்க செய்ய முயன்று வருகின்றனர். மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது. இது அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
