Hollywood Cinema news
அந்த பெண்ணுடன் ப*க்கையறை காட்சியில்.. கஷ்டமா இருந்துச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபல நடிகை.!
ஹாலிவுட்டை பொறுத்தவரை அங்கே திரைப்படங்களை விடவும் டிவி தொடர்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதனால்தான் நெட்ப்ளிக்ஸ் மாதிரியான ஓடிடி தளங்கள் அங்கு அதிக வரவேற்பு பெற்று வருகின்றன.
பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகும் நிறைய டிவி தொடர்களுக்கு தற்சமயம் வரை வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு தொடராக கேம் ஆப் த்ரோன்ஸ் என்கிற தொடரும் இருந்து வந்தது.
மன்னர்கள் காலத்தில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இதன் கதை எழுதப்பட்டிருந்தது. எப்படி இந்தியாவில் மகாபாரதம் மிகப் பிரபலமாக இருக்கிறதோ அதே மாதிரியான கதை அமைப்பை தான் கேம் ஆப் த்ரோன்ஸ் கதையும் கொண்டு இருந்தது.
இந்த மொத்த சீரிசிலுமே அதிகமாக மக்களை கவர்ந்த ஒரு சில கதாபாத்திரங்கள் உண்டு. டிரியன் லானிஸ்டர், ஆர்யா ஸ்டார்க் போன்ற அந்த கதாபாத்திரங்களின் வரிசையில் பிரபலமானவர் டெனேரியஸ் டார்கெரியன்.
டனேரியஸ் கதாபாத்திரம் கேம் ஆப் த்ரோன்ஸ் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஆகும். ஒட்டுமொத்த கதையையும் மாற்றக்கூடிய ஒரு கதாபாத்திரமாக அது இருக்கும். எமிலியா கிளார்க் என்கிற நடிகை தான் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
நடிகை எமிலியா க்ளார்க்:
மிக சிறப்பாகவே அதில் நடித்திருந்தார் எமிலியா கிளார்க் இந்த நிலையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் அவருக்கு நிறைய கவர்ச்சி காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. நிறைய படுக்கையறை காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன.
அதேபோல நிறைய திரைப்படங்களிலும் படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கிறார் எமிலியா. ஏனெனில் ஹாலிவுட்டில் இது ஒரு சகஜமான விஷயமாகும் அதனால் எமிலியாவிற்கு அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் நிறைய படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கிறீர்கள். அதில் எதில் உங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது என்று கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த எமிலியா கூறும் பொழுது ஒரு பெண்ணுடன் நான் உறவு கொள்வது போல ஒரு காட்சி படமாகப்பட்டது அந்த காட்சி தான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
