உங்க கிட்ட உதவியாளராய் சேரணும்! – வாலிக்கு கடிதம் போட்டு இறுதியில் பெறும் இயக்குனரான நபர்!- யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசனிற்கு பிறகு பெரும் கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். 1960 களில் பலர் கவிஞர் வாலியிடம் உதவியாளராக பணிபுரிய முயற்சித்து வந்தனர். அதிலும் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் பலரும் தொடர்ந்து கவிஞர் வாலிக்கு கடிதம் எழுதி வந்தனர்.

ஏனெனில் அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் இருந்து வந்த பலர் பெரும் சாதனைகளை தமிழ் சினிமாவில் செய்திருந்தனர். இதனால் கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழ் சினிமா என்பது பெரும் கனவாக இருந்தது.
இந்த நிலையில் வரிசையாக ஹிட் பாடல்களாக கொடுத்து வந்த வாலிக்கு ஒரு கிராமத்து இளைஞனிடம் இருந்து தொடர்ந்து கடிதங்கள் வந்து கொண்டே இருந்தன. அதுவும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தொடர்ந்து அந்த மனிதர் வாலிக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்.
ஆனால் வாலிக்கு இளைஞர்கள் கடிதம் எழுதுவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்தான் என்பதால் வாலி அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் திரைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட அந்த கிராமத்து இளைஞன் பிறகு எப்படியோ தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார்.
பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஒரு பெரும் இயக்குனராக ஆனார். தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய அந்த இயக்குனர் ஒரு கட்டத்தில் தனது படத்தில் கவிஞர் வாலிக்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகளை அளித்தார். அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் வேறு யாரும் இல்லை. இசைஞானி இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் அவர்கள்தான்.
இப்போதும் கூட சிறு கிராமத்தில் இருந்து பெரும் கனவுகளோடு சென்னையில் வந்து பெரும் சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு இளையராஜா கங்கை அமரன் போன்றவர்களே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்