News
நாங்க கொடுத்த பிச்சைதான் வைரமுத்துவோட வாழ்க்கை!.. இப்படியெல்லாம் பேசுனா அவ்வளவுதான்!.. பொங்கி எழுந்த கங்கை அமரன்.
திரைத்துறையில் இளையராஜா இசையமைக்க துவங்கிய காலக்கட்டம் முதலே கங்கை அமரனும் அவருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தான் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமையை தனக்கு வழங்க வேண்டும் என இளையராஜா கேட்டிருந்தார்.
அதன் மூலம் யாரெல்லாம் இளையராஜா பாடல்களை பயன்படுத்துகிறார்களோ அவர்கள் எல்லாம் இளையராஜாவுக்கு காப்பு தொகை தர வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இதற்கு எதிரான தனது வாதத்தை முன் வைத்திருந்தார்.
பாடல் வரிகளும், இசையும் சேர்ந்தால்தான் பாடல் முழுமைப்பெறுமே தவிர இசை மட்டுமே பாடலை முழுமை செய்யாது. ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என கேட்டால் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று நிகரானது என்றுதான் கூறவேண்டும் என்கிறார் வைரமுத்து.

எனவே பாடல் இசையமைப்பாளருக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது என்கிறார் வைரமுத்து. இதனால் கடுப்பான கங்கை அமரன் தனது பேட்டியில் பேசும்போது நாங்கள் இல்லாமல் வைரமுத்து இவ்வளவு உயர்ந்திருக்க முடியாது.
வைரமுத்து ஒரு நல்ல பாடலாசிரியராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது. கொஞ்சமாவது நன்றியுணர்வு இருந்திருந்தால் இப்படி இளையராஜாவை தவறாக பேசியிருக்க மாட்டார். ஒரு பொன் மாலை பொழுது பாடலில் இளையராஜா மட்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் வைரமுத்துவின் நிலை என்னவாக இருக்கும் என்று பேசியிருக்கிறார் கங்கை அமரன்.
