ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு இவங்களுக்கு எல்லாம் யு.பி.ஐ எடுக்காது.. வெளியான திடுக்கிடும் தகவல்.!

டிஜிட்டல் ட்ரான்ஸாக்‌ஷன் என்கிற முறை இந்தியாவில் அமல்ப்படுத்தப்பட்ட நாள் முதலே வங்கி மோசடிகளின் அளவும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. வங்கியில் இருந்து எவ்வளவிற்கு எளிதாக பணத்தை எடுத்துக்கொள்ள இந்த தொழில்நுட்பம் உதவுகிறதோ அதே அளவிற்கு அதில் தவறுகள் நடக்கவும் உதவுகிறது.

இந்த நிலையில் யு.பி.ஐ என்கிற பணம் செலுத்தும் வசதி 10 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. கூகுள் பே, போன் பே, பே டி எம் என்கிற பல நிறுவனங்கள் இந்த யு.பி.ஐ முறையின் அடிப்படையில் செயல்ப்பட்டு வருபவையாக இருக்கின்றன.

இந்த நிலையில் யு.பி.ஐ தொழில்நுட்பம் வந்தது முதலே அது தொடர்பான மோசடிகளும் அதிகமாக நடந்து வருகிறது. முக்கியமாக மோசடி செய்த நபரை பிடிப்பது என்பது கடினமான விஷயமாக இருந்து வருகிறது. எனவே அதற்கான பாதுகாப்பு அம்சம் குறித்து அரசு தொடர்ந்து யோசித்து வருகிறது.

Social Media Bar

அந்த வகையில் தற்சமயம் புதிய விதிமுறை அமல்ப்படுத்தப்பட உள்ளது. அதன்படி பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை கொண்டு பலரும் யு.பி.ஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல தங்களது மொபைல் எண்ணையே ரிஜிஸ்டர் செய்யாமல் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

எனவே அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படாத மொபைல் எண்களை கொண்டு யு.பி.ஐ வசதியை பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது அரசு.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.