வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எடுக்கலையாம் – டிவிஸ்ட் அடித்த இயக்குனர்..!

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு திரைப்படங்களுமே ஹிட் அடித்த படங்களாக உள்ளன. இதனால் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிம்பு. 

Social Media Bar

இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பத்தோடு வெந்து தணிந்தது காடு திரைப்படம் முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அவர் கேங்ஸ்டராக வருகிறார் என்பதால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

தற்சமயம் இவர் பத்து தல ராவணன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தன.

இந்நிலையில் தற்சமயம் கொளதம் மேனன் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க வேண்டாம் என கூறிவிட்டாராம். என்ன விஷயம் என பார்க்கும்போது அவர் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஏற்கனவே கதை எழுதி வைத்துவிட்டாராம்.

எனவே அந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். சிம்புவும் கூட இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளாராம். காதலானாக தோன்றும் சிம்புவை மக்கள் பார்த்து வெகு நாட்கள் ஆவதால் இது மக்களுக்கு விருப்ப படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.