Bigg Boss Tamil
அசிங்கமா போயிடுமேன்னு பாக்குறேன்..! – கமலிடம் வெளிப்படையாக கூறிய ராபர்ட் மாஸ்டர்
பிக்பாஸ் தொடரில் இந்த வாரம் டாப் ட்ரெண்டிங் உள்ள போட்டியாளர் என்றால் அது அசிமாகதான் இருக்கும். வந்த ஒரு வாரம் மட்டும் அவரால் பெரிதாக பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்சமயம் வாரா வாரம் பிரச்சனை தரும் நபராக அசிம் பார்க்கப்படுகிறார்.

போன வாரம் ஆயிஷாவுடன் அசிமிற்கு பெரும் சண்டை நிகழ்ந்தது. இந்த வாரம் அதே போல தனலெட்சுமியுடன் அசிமிற்கு சண்டை நடந்தது. நேற்றைய பிக் பாஸில் அதற்கு கமல் பஞ்சாயத்து செய்ததை பார்த்திருக்கலாம்.
இந்நிலையில் இன்று ராபர்ட் மாஸ்டர் மீது அசிம் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அதாவது ராபர்ட் மாஸ்டர் அவருடன் அதிகமாக பேசவில்லை என்றார்.
இதுக்குறித்து ராபர்ட் மாஸ்டர் கூறும்போது “ஆமாம் அது உண்மைதான். ஏனெனில் அசிம் எல்லோரிடமும் தவறாக பேசுகிறார். அதே போல என்னிடம் பேசினால் எனக்கு அசிங்கமாக போய் விடும் என நாம் பயப்படுகிறேன்” என்றார்.
இதையடுத்து அசிமிற்கு எதிரான வாதங்கள் இன்னும் அதிகரித்து வருகிறது.
