அடுத்த படத்திற்கு தயாராகும் ரஜினி..! – அடுத்த மாதம் பூஜை

தற்சமயம் ரஜினி நடித்து நெல்சன் இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் கைதிகளை கண்காணிக்கும் ஜெயிலராக ரஜினி நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் சில நாட்களுக்கு முன்புதான் துவங்கியது. 

இந்த படத்திற்கு பிறகு ரஜினி தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு கொடுத்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு போய் கொண்டிருக்கும் போதே சிபி சக்ரவர்த்தி திரைப்படத்திற்கு பூசை போடும் வேலை நடந்து வருகிறதாம்.

அடுத்த மாதம் அந்த படத்திற்கான பூஜையை போட போவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து சினி வட்டாரத்தில் கூறும்போது எப்படியும் ஜெயிலர் படத்திற்கு ரஜினி 2 மாதம் கால் ஷீட் கொடுத்திருப்பார்.

அது நவம்பரில் முடிந்துவிடும். பிறகு டிசம்பரில் சிபி சக்ரவர்த்தி படத்தில் நடிப்பார் என கூறுகின்றனர். 

சிபி சக்ரவர்த்தி தனது முதல் படமான டான் படத்தையே 100 கோடி ஓட செய்தவர் என்பதால் அவர் மீது பெரிய நம்பிக்கையில் உள்ளாராம் ரஜினி.

Refresh