News
நான் இந்த நடிகையைதான் காதலிக்கிறேன் – காதலி குறித்து தகவல் வெளியிட்ட சித்தார்த்..!
தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து அதிக படங்கள் நடிப்பதில்லை என்றாலும் கூட வருடத்திற்கு ஒரு படமாவது இவர் நடித்து விடுகிறார்.

மணிரத்னம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை அதிதிராவ் ஹைதரியும் இவரும் காதலித்து வருவதாக அதிகாரமற்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதற்கு ஏற்றாற் போல இந்த ஜோடிகளும் பல இடங்களுக்கு ஜோடியாக செல்வது, ஜோடியாகவே போட்டோக்கள் பதிவிடுவது என இருந்தனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அதிதி ஹைதரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறியிருந்தார் சித்தார்த். அதில் அவரும் அதிதியும் காதலிக்கும் விஷயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
