மனைவி தராததை தந்த காதலி! 23 வயது பெண்ணை காதலிக்கும் பப்லு!

பிரபல சீரியல் நடிகரான பப்லு ப்ரித்விராஜ் தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் செய்தி சமீப காலமாக வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் பப்லு ப்ரித்விராஜ். பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள பப்லு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார்.

பப்லுவுக்கு முன்னதாக பீலா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். தற்போது பப்லு 23 வயதுடைய இளம்பெண் ஒருவரை காதலித்து வருவதாக பேசிக் கொள்ளப்பட்டது.

கிசுகிசுக்களை முறியடிக்கும் விதமாக தனது காதல் குறித்து காதலியுடனே தோன்றி நேர்க்காணல் அளித்துள்ளார் பப்லு. அதில் பேசியுள்ள அவர் ஷீத்தல் என்ற 23 வயது இளம்பெண் பெங்களூரில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில் அவரும், பப்லுவும் ஒரு காபி ஷாப்பில் சந்தித்து பேசியதாகவும், பின்னர் அது காதலாக மாறியதாகவும் கூறியுள்ளார்.

தனது முதல் மனைவி குறித்து பேசியுள்ள அவர் மரியாதை, காதல், பாசம், இன்பம், துன்பம் எதிலும் தனது மனைவி ஒரு மனைவியாக நடந்துகொள்ளவில்லை என்றும், அதனால் ஷீத்தலை திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Refresh