குட் நைட்ட விட சிறப்பா இருக்கா..! இல்ல சுமாரா இருக்கா… ஜிவி பிரகாஷின் டியர் திரைப்பட விமர்சனம்!.
ஒரு காலத்தில் ராமராஜன் மாதிரியான நடிகர்கள் மாதத்திற்கு ஒரு படம் வெளியிடுவார்கள் என கேட்டிருப்போம். அதை தற்சமயம் மக்கள் கண் முன் காட்டுகிறார் ஜிவி பிரகாஷ்.
ரெபெல், கள்வன் வரிசையில் அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் டியர். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.
படத்தின் கதைப்படி ஜிவி பிரகாஷ் ஒரு பத்திரிக்கை சேனலில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு லைட் ஸ்லீப்பிங் என்கிற பிரச்சனை இருக்கிறது. எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாலும் சின்னதாக கேட்கும் சத்தம் அவருக்கு விழிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸ்க்கும் ஜிவி பிரகாஷிற்கும் திருமணமாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இரவில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இந்த நிலையில் இது ஜிவி பிரகாஷின் உறக்கத்தை பயங்கரமாக பாதிக்கிறது. இதனால் வேலையில் துவங்கி எங்கு பார்த்தாலும் பிரச்சனையை அனுபவிக்கும் ஜிவி ஒரு கட்டத்தில் டைவர்ஸ் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைகள் எல்லாம் எப்படி சரி ஆக போகிறது என்பதுதான் கதை.
விமர்சனம்:
இந்த மாதிரி கதைகள் எல்லாம் தமிழில் மாமூலானவை என கூறலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மாறுப்பட்ட பிரச்சனைகள் அவர்கள் இல்வாழ்க்கையை பாதிக்க பிறகு அந்த பிரச்சனையை ஏற்றுக்கொண்டு அவர்கள் ஒன்றிணைவது என்பது ஒரு மாமூலான கதையாகும்.

அதிலிருந்து மாறுப்பட்ட திரைப்படமாக குட்நைட் இருந்ததால் தான் அந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. அந்த இடத்தில் இந்த படம் தடுமாறிவிட்டது. மேலும் குட் நைட் படத்தில் காதலர்கள் இருவருக்கும் இருந்த உணர்வுபூர்வமான உறவை இந்த படத்தில் பார்க்க முடியவில்லை.
சொல்ல போனால் ஐஸ்வர்யா ராஜேஷை ஜிவி பிரகாஷின் மனைவியாகவே பொருத்தி பார்க்க முடியாத அளவிற்கு அமைந்துள்ளது கதைக்களம். எனவே இந்த படம் பார்ப்பவர்களுக்கு எண்டர்டெயின் மெண்டாக இல்லை என கூறப்படுகிறது.