Connect with us

கொடுத்த பில்டப்பு ஒத்து வரலையே.. எப்படியிருக்கு ஜி.வி நடித்த கிங்ஸ்டன்.. பட விமர்சனம்.!

Movie Reviews

கொடுத்த பில்டப்பு ஒத்து வரலையே.. எப்படியிருக்கு ஜி.வி நடித்த கிங்ஸ்டன்.. பட விமர்சனம்.!

Social Media Bar

ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்சமயம் வெளியான திரைப்படம் கிங்ஸ்டன். இந்த திரைப்படத்திற்கு ட்ரைலர் வந்த நிலையில் படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. ஹாலிவுட்டில் கடலில் நடக்கும் மர்மங்களை கதை களமாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன.

கிங்ஸ்டன் அப்படியான ஒரு படமாக தமிழில் முதன் முதலில் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை:

தொடர்ந்து வங்க கடலில் நிலவி வரும் மீனவர் பிரச்சனையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை அமைப்பு அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் என்னும் கிராமத்தில் கதை நடக்கிறது. தொடர்ந்து அந்த கிராமத்து மக்கள் கடலுக்கு சென்று ஆபத்தை சந்திக்கின்றனர்.

பெரும்பாலும் கடலுக்குள் செல்பவர்கள் உயிருடன் கரை திரும்புவதில்லை. ஒன்று காணாமல் போய்விடுவர். அல்லது இறந்துவிடுவார்கள் என்கிற நிலை இருந்து வந்தது. 1982 இல் கடலில் போஸ் என்பவர் இறந்துவிட அவரது ஆவியால்தான் இதெல்லாம் நடக்கிறது என நினைக்கின்றனர் கிராம மக்கள்.

இந்த நிலையில் பல வருடமாக இருக்கும் இந்த பிரச்சனையை சரி செய்ய கதாநாயகன் கடலுக்குள் செல்கிறார். அங்கு அவருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது.

இந்த படத்தில் கிராபிக்ஸ் வேலைபாடுகள் எல்லாம் நன்றாக இருந்தாலும் கூட கதை செல்லும் விதம் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்கியமாக முதல் கட்டம் இருக்கும் சுவாரஸ்யம் கூட இரண்டாம் கட்டத்தில் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top