யார்ரா இவனுங்க இந்த பாட்ட கண்டுக்கலைனு இருந்துச்சு!.. ஓப்பனாக பேசிய ஜி.வி பிரகாஷ்!.

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இசையமைப்பாளர்களில் ஜி.வி பிரகாஷ் முக்கியமானவர். தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் என்கிற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி பிரகாஷ்.

வெயில் திரைப்படத்தில் வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய இரு பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. ஆனால் அப்போதெல்லாம் ஜி.வி பிரகாஷ் யார் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் போக போக மதராசப்பட்டினம், ஆடுகளம் என தொடர்ந்து சிறப்பான பாடல்களை கொடுக்க துவங்கினார் ஜி.வி பிரகாஷ்.

அதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஜி.வி பிரகாஷ். டார்லிங் என்கிற திரைப்படம் அவரது முதல் படமாக அமைந்தது. அது அவருக்கு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்சமயம் அவரது திரைப்படங்கள் வரிசையாக திரைக்கு வந்துக்கொண்டுள்ளன.

gv-prakash
gv-prakash
Social Media Bar

அவர் நடிப்பில் கள்வன் என்கிற திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. யானை தந்தம் கடத்தல் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஜிவி பிரகாஷ் கூறும்போது எந்த ஒரு பாடலுக்கு நன்றாக இசையமைத்தும் மக்கள் கண்டுக்கொள்ளவில்லை என நினைக்கிறீர்கள் என கேட்டப்பொழுது அதற்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்தார்.

அதில் அவர் கூறும்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு நான் இசையமைத்தப்போது படம் வெளியான சமயத்தில் அது அவ்வளவாக பிரபலமாகவில்லை. மேலும் படம் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. நன்றாகதானே இருக்கிறது இந்த படம் இதை ஏன் பிடிக்கலைனு சொல்றானுங்க என இருந்தது. ஆனால் தாமதமாக அந்த இசைக்கும் படத்திற்கும் அங்கீகாரம் கிடைத்தது என்கிறார் ஜிவி பிரகாஷ்.