இனப்பெருமை பேசி சிக்கிய நடிகை.. இது தேவையா?

ஹாலிவுட்டை பொறுத்தவரை இந்தியா மாதிரி இல்லாமல் அங்கு வேறுபாடு பேசுவது குறித்த சட்டங்கள் சற்று கடுமையானதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சரி மற்றும் மாநிலங்களிலும் சரி ஜாதி பெருமை பேசுவது ஆணவ கொலை நிகழ்த்துவது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பார்க்க முடியும்.

உணவகங்களுக்கு கூட ஜாதி பெயரில் பெயர்கள் இருப்பதை பார்க்க முடியும் அதேபோல தெரு பெயர்களும் சாதியின் பெயரில் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை எந்த ஒரு சொல்லும் வேற்றுமையை ஏற்படுத்த கூடியதாக இருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான சட்டமாக இருக்கிறது.

இந்த நிலையில் இப்பொழுது ஹாலிவுட் பிரபலமாக இருந்து வரும் நடிகை சிட்னி ஸ்வீனி பேசியிருந்த ஒரு விளம்பரம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்சமயம் ஹாலிவுட்டில் பிரபலமாகி வரும் நடிகையாக சிட்னி ஸ்வீனி இருந்து வருகிறார்.

Social Media Bar

இவர் எந்த அளவிற்கு பிரபலம் என்று கூறினால் இவர் குளித்த நீரின் சொட்டுக்களை பயன்படுத்தி சோப்பு செய்து இருக்கிறது ஒரு நிறுவனம் அந்த சோப்பை வாங்குவதற்கு பெரிய ரசிக்கப்பட்டாளமே இருந்து வருகிறது.

அவ்வளவு பிரபலமாக இருக்கும் சிட்னி சமீபத்தில் ஒரு ஜீன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அப்பொழுது அவர் ஜீன்ஸ் குறித்து பேசும் பொழுது ஒரு மனிதனின் முகத்தோற்றம் கண் அமைப்பு முடி ஆகியவற்றை ஜீன் தான் முடிவு செய்கிறது என்று அறிவியல் ரீதியாக பேசியிருந்தார்.

அந்த விளம்பரத்தின் இறுதியில் சிட்னி நல்ல ஜீனை கொண்டு இருக்கிறார் என்று விளம்பரம் முடிந்தது. அப்படியென்றால் வெள்ளையர்கள் மட்டும்தான் நல்ல ஜீன் கொண்டவர்களாக இருக்கிறார்களா என்று ஒரு கேள்வி என தொடங்கியுள்ளது.

எனவே இன வேறுபாட்டை கிளப்பும் வகையில் அந்த விளம்பரம் இருந்ததாக இப்பொழுது சர்ச்சை துவங்கி இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு நடுவே சிட்னிக்கு தன்னுடைய ஆதரவை அளித்து இந்த விஷயத்தை இன்னமும் அதிக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.