Hollywood Cinema news
புகழ்பெற்ற ஈவில் டெட் படத்தின் மிரள வைக்கும் அடுத்த பாகம்! – எப்போ ரிலீஸ்?
வீடுகளில் டிவிடி ப்ளேயர்கள் இருந்த காலக்கட்டங்களில் பேய் படம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது ஈவில் டெட் என்கிற திரைப்படம்தான்.
ஒற்றை கையில் ரம்பத்தை மாட்டிக்கொண்டு பேய்களை அறுத்து தள்ளும் நாயகனை பலரும் அப்போது வியந்து பார்த்திருப்போம். அதற்கு பிறகு எவ்வளவோ திரைப்படங்கள் வெளிவந்த பிறகும் ஈவில் டெட் திரைப்படம் தந்த அனுபவத்தை அவை தந்திருக்குமா? என்பது சந்தேகமே?
இந்த நிலையில் ஈவில் டெட் ரைஸ் என்கிற பெயரிலே புது பேய் படம் ஹாலிவுட்டில் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தையின் அம்மாவிற்கு பேய் பிடித்துவிடுகிறது. அவளிடமிருந்து குழந்தைகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதாக கதை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இது முதல் பாகம்தான். படத்தின் வெற்றியை பொறுத்து அடுத்தடுத்த பாகங்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனாலும் பழைய ஈவில் டெட் படத்திற்கும் இதற்குமிடையே எந்த வித ஒற்றுமையும் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் அதிருப்தி காட்டி வருகின்றனர்.
இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் டீசர் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.