Cinema History
சிவாஜி வர தாமதம் ஆனதால் இடையில் சம்பவம் செய்து ஹிட் கொடுத்த நாகேஷ்!
பழைய தமிழ் படங்களில் சில காட்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றதாக இருக்கும். இப்போது கூட மக்கள் அந்த காட்சிகளை கண்டால் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். அப்படியாக சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் புராணம் திரைப்படத்திலும் சில காட்சிகள் உண்டு.

அதில் தருமி என்னும் புலவராக நாகேஷ் நடித்திருப்பார். அப்போது படத்தில் ஒரு காட்சியில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் புலவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும். அதை கேட்டு நாகேஷ் படபடப்புடன் நடந்துக்கொண்டே பேசும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
அந்த காட்சியை எடுப்பதற்கு யோசனையே கிடையாதாம். அன்று நாகேஷ் முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார். ஆனால் சிவாஜி இன்னும் வரவில்லை. எனவே அதற்கு முன்பு இப்படி ஒரு காட்சியை எடுக்கலாம் என நாகேஷ் கூறியுள்ளார்.
படக்குழுவும் சரி என எடுத்துள்ளனர். இறுதியில் அந்த காட்சி அற்புதமாக அமைந்தது. படத்திலும் அது வரவேற்பை பெற்றது. இப்போது வரை திருவிளையாடல் புராணம் படத்தை கூறினால் தருமி நினைவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக அந்த காட்சியும் இருந்தது என கூறலாம்.
