Connect with us

தயாரிப்பாளர் மடியிலேயே கை வைத்த விஜய்!.. இப்படிதான் சம்பளத்தை ஏத்துனாரா?

Cinema History

தயாரிப்பாளர் மடியிலேயே கை வைத்த விஜய்!.. இப்படிதான் சம்பளத்தை ஏத்துனாரா?

Social Media Bar

தமிழில் உள்ள கமர்ஷியல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. ஆனால் மக்களிடம் இருக்கும் வரவேற்பை பயன்படுத்தி கதாநாயகர்கள் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முக்கிய நடிகர்கள் தங்களது மார்க்கெட்டிற்கு ஏற்றாற் போல சம்பளம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

ஏனெனில் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எனவே தனது அடுத்த படத்திற்கு அதிக சம்பளம் வாங்க இருக்கிறார் என தகவல்கள் கசிந்து வந்தன. வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கிறார் விஜய்.

ஆனால் லியோ படத்தில் 130 கோடிதான் சம்பளமாக வாங்குகிறாராம் விஜய். எப்படி திடீரென்று இவரது சம்பளம் 70 கோடி உயர்ந்தது என்கிற கேள்வி திரைத்துறையிலேயே பலருக்கும் இருந்து வருகிறது. இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது தளபதி 68 திரைப்படத்திற்கு சம்பளமாக ரூபாய் 100 கோடியும், மேலும் படத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கும் கேட்டுள்ளார் விஜய்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் அவருக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top