Cinema History
அர்த்தமில்லாம பாடுனாதான் காசு கிடைக்கும்… பாட்டுலையே கலாய்த்து விட்ட இளையராஜா!..
அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இளையராஜா கடும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார். உதாரணமாக சாலை ஓரங்களிலும் மெரினா கடற்கரையிலும் அமர்ந்து அப்போது பாடல் பாடுவாராம் இளையராஜா.
ஏனெனில் தினசரி சாப்பிடுவதற்கே காசு இல்லாத நிலையில் அவர் இருப்பார். இந்த நிலையில் அவர் பட்ட கஷ்டங்களையும் அவரது வாழ்க்கையையும் குறிக்கும் விதமாக பல பாடங்களில் அவர் பாடல் வரிகளை எழுதுவது உண்டு.
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் பாட்டாலே புத்தி சொன்னான் என்கிற பாடலை பாடியிருப்பார் இளையராஜா. அந்த பாடல் முழுக்க முழுக்க அவரை பற்றி அவரே பாடிய பாடலாகும். இதே போல காசி திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுக்குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
காசுக்காக நான் பாடும் பாடல்கள் அனைத்துமே அர்த்தமற்ற பாட்டுக்கள்தான். அவற்றை பணம் ஈட்டவே நான் இசைக்கிறேன். அந்த பொருளற்ற பாடலையும் காசு கொடுத்து வாங்கி செல்கின்றார்கள் என்கிற அர்த்தத்தில் என் மன வானில் என்கிற பாடலில் சில வரிகளை பாடியிருந்தார் இளையராஜா.
பொருளுக்காய் பாட்டை சொன்னால்
பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளில்லா பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம் என்கிற வரிகளே அவை..
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்