Tamil Cinema News
இந்திய சினிமாவில் பெரும் சாதனை.. ஏழு முறை ரீமேக் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்.. எந்தெந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மாபெரும் இசை அரசனாக அறியப்படுபவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் ஒரே பாடலை ஆறு முறை வேறு வேறு படங்களில் வேறு வேறு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இசையமைத்துள்ளார் இளையராஜா.
இப்படி ஒரு விஷயத்தை இந்திய அளவில் எந்த இசையமைப்பாளரும் செய்தது இல்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம். 1981 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓலங்கள் என்கிற திரைப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்தான் தும்பிவா தும்பகுடத்தில், இந்த பாடலை ஜானகி பாடியிருந்தார்.
மலையாளத்தில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அதே வருடம் தமிழில் வந்த ஆட்டோ ராஜா என்கிற திரைப்படத்தில் சங்கத்தில் பாடாத கவிதை என்னும் பாடலாக அமைத்தார் இளையராஜா. இந்த பாடலையும் ஜானகிதான் பாடினார்.
இந்த நிலையில் 1986 ஆம் ஆண்டு நீர்ஷனா என்கிற தெலுங்கு படத்தை இயக்கினார் பாலுமகேந்திரா. அந்த படத்தில் தும்பிவா பாடலை மூன்றாவது முறையாக ஆகாஷம் யேனாடிதோ என்கிற பாடலாக பாடினார்கள். பிறகு நான்காவது முறையாக நீர்ஷனா திரைப்படம் 1988 இல் தமிழில் கண்ணே கலைமானே என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.
அதில் நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே என்று பாடல் வரிகளை மாற்றி அதே பாடல் இசையமைக்கப்பட்டது. இந்த பாடலையும் ஜானகிதான் பாடினார். இதற்கு அடுத்து எட்டு வருடங்கள் கழித்து 1996 இல் ஹிந்தியில் ஆர் எக் பிரேம் கஹானி என்கிற திரைப்படம் ஒன்று வெளியானது.
அதில் மண்டே தொ உட்கர் என்கிற பாடலாக மீண்டும் அதே பாடல் ஐந்தாவது முறையாக வெளியானது. இதற்கு பிறகு 2004 ஆம் ஆண்டு இளையராஜா இத்தலிக்கு இசை சுற்றுலா சென்றார். அப்போது இந்த பாடலை சர்வதேச தரத்துக்கு மாற்றி Mood kaapi என ஒரு பாடலாக ஆறாவது முறையாக வெளியிட்டார்.
இதெல்லாம் முடிந்த பிறகும் 2004 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த பா திரைப்படத்தில் கும் சும் கும் என்று மீண்டும் ஒலித்தது ராஜாவின் அந்த பாடல்.
இப்படி இந்திய சினிமாவிலேயே அந்த ஒரு பாடல் மட்டும் 7 முறை மீண்டும் மீண்டும் பாடலாக்கப்பட்டுள்ளது.
