தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தற்சமயம் இவர் பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் கீர்த்தி சுரேஷ் கூறும் பொழுது ஒருமுறை சாலையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு குடிகாரன் எனக்கு அருகில் வந்து நின்றான். பிறகு அவன் எனது மேல் சாய்ந்தான். இதனால் கோபம் அடைந்த நான் அவனை நன்றாக அடித்து விட்டேன்.
கீர்த்தி சுரேஷ்க்கு நடந்த நிகழ்வு:

பிறகு நான் சாலையை கிராஸ் செய்யும் போது ஏதோ ஒன்று எனது தலையை தாக்கியது. சிறிது நேரத்திற்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை நான் கீழே விழுந்து விட்டேன். பிறகு எழுந்து என்ன நடந்தது என்று பார்க்கும் பொழுதுதான் விஷயம் தெரிந்தது.
நான் யாரை அடித்தேனோ அந்த நபர் எனது என்னை பின்னால் இருந்து தாக்கி விட்டார் இதனால் கோபம் அடைந்த நான் அவனை பிடித்து கொண்டு போய் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தேன் என்று அப்பொழுது அவர் செய்த தைரியமான செயல் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பேசியிருக்கிறார்






