Connect with us

முதல் நாளே இவ்வளவுதானா?.. இந்தியன் 2 முதல் நாள் வசூல் நிலவரம்!..

indian 2

News

முதல் நாளே இவ்வளவுதானா?.. இந்தியன் 2 முதல் நாள் வசூல் நிலவரம்!..

Social Media Bar

7 வருட படப்பிடிப்புக்கு நடுவே மாபெரும் எதிர்பார்ப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இந்தியn 2. 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை பொறுத்தவரை முதல் பாகத்தில் மொத்தமாக மாறிய படமாக இருக்கிறது.

இயக்குனர் ஷங்கர் படங்களை பொறுத்தவரை சமூகத்திற்கு தேவையான அரசியலை பேசும் வகையில்தான் அவரது திரைப்படங்கள் இருக்கும் என்றாலும் கூட இப்போதைய தலைமுறையினர் எந்த அளவுக்கு இந்தியன் 2 திரைப்படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே.

இயக்குனர் ஷங்கர் படம்:

அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படம் நேற்றே கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற திரைப்படமாக இருந்து வந்தது. இதற்கு நடுவே பட வசூலை பொறுத்தவரை அவ்வளவு ஒன்றும் படம் பின் தங்கிவிடவில்லை என கூறப்படுகிறது,

indian-2
indian-2

நேற்று மட்டும் மொத்தமாக படம் 26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ் மொழியில் 55 சதவீதமும், ஹிந்தியில் 11 சதவீதமும், தெலுங்கில் 30 சதவீதமும் வசூல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

வசூல் நிலவரம்:

ஒரு கமல் படம் என்னும் ரீதியில் இது டீசண்டான வசூல்தான் என்றாலும் கூட ஷங்கர் இயக்கிய படம் எனும்போது கண்டிப்பாக அதிக பட்ஜெட் படமாகதான் இருக்கும். எனவே இதே ரீதியில் வசூல் கிடைக்கும் நிலையில் முதல் ஒரு வாரத்திலேயே போட்ட காசை எடுத்துவிடலாம் என கூறப்படுகிறது.

indian-2
indian-2

இந்தியன் 2 திரைப்படத்தின் கதை முடியும்போது இந்தியன் 3 திரைப்படத்திற்கான கண்ட்னியூவும் இருக்கிறதாம்.

Articles

parle g
madampatty rangaraj
To Top