லாஜிக் இல்லாமல் பேசிய நடிகர் ஜெகன்!. உங்கள் படம் சரியா இருந்துச்சா.. மடக்கிய ரசிகர்கள்!..
சின்னத்திரையில் வெகு காலங்களாக காமெடி கதாபாத்திரங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தவர் நடிகர் ஜெகன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்த ஜெகன் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் கே.வி ஆனந்த் மூலமாக இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அயன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவரை பெரிதாக வளர்த்து விட்டது. அதனை தொடர்ந்து கவண் திரைப்படத்திலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார் கே.வி ஆனந்த்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது ஜெகன் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது. அதாவது ஒரு திரைப்படத்தில் கதை மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி முக்கியமோ அதேபோல படத்தின் டைட்டிலும் ரொம்ப முக்கியம் என்று கூறிய ஜெகன் அவர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை கூறியிருந்தார்.
அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்த ஒருவர் கதை ஒன்றை சொன்னாராம். கதை எல்லாம் நன்றாக தான் இருந்தது. ஆனால் படத்தின் பெயர் என்ன என்று கேட்கும் பொழுது அவர் கிணறு என்று கூறினார் அப்படி என்றால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் ஜெகன்.

அதேபோல மற்றும் ஒருவர் வரட்டி என்னும் படத்திற்கான கதையை வந்து சொன்னாராம். அதையும் ஜெகன் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மாதிரியான பெயர் உள்ள படங்களெல்லாம் எப்படி வெற்றி பெறும் என்று கேள்வி எழுப்பினார் ஜெகன்.
இதற்கு பதில் அளித்த நெட்டிசன்கள் பிச்சைக்காரன் என்று பெயர் வைத்த படம் ஓடவில்லையா.. நடிகர்களை, இயக்குனரை பொறுத்துதான் ஒரு படத்தின் வெற்றி இருக்கிறது தவிர பெயரை பொறுத்து கிடையாது. அப்படி பார்த்தால் நீங்கள் நடித்த அயன், கவன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் என்ன பெயர். அப்படியான பெயரை பலரும் கேள்விப்பட்டதே கிடையாது என்று ஜெகனையை மடக்கி கேள்வி கேட்டுள்ளனர்.