Cinema History
நீ சொன்ன மாதிரியே நடந்துடுச்சுயா!.. எம்.ஜி.ஆருக்கு நடக்க போவதை முன் கூட்டியே கணித்த ஜெய்சங்கர்!..
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் வயதான பிறகு சினிமாவில் இளைஞர்களுக்கான வெற்றிடம் உருவானது. அந்த சமயத்தில் ஜெய் சங்கர் மற்றும் சிவக்குமார் இவர்கள் இருவரும்தான் அந்த இடத்தை நிரப்பினர்.
அதிலும் ஜெய்சங்கர் முக்கியமான கதாநாயகன் ஆவார். ஹாலிவுட்டில் வரும் துப்பறியும் கதைகள் மற்றும் கௌபாய் கதைகள் மேல் அதிக ஆர்வம் கொண்ட ஜெய் சங்கர் தொடர்ந்து தமிழில் அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் அப்போது எம்.ஜி.ஆரும் நடித்து வந்ததால் இவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்து வந்தது. அப்போது எம்.ஜி.ஆர் திமுக கட்சியில் இருந்தார். தொடர்ந்து திரைப்படங்கள் மூலம் வரவேற்பை பெற்று வந்த எம்.ஜி.ஆர் அந்த திரைப்படங்களில் தி.மு.கவின் கொள்கைகளையும் பரப்பி வந்தார்.

இந்த நிலையில் ஒருமுறை எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்த ஜெய் சங்கர் அவரிடம் பேசும்போது “ஐயா சினிமாவில் உங்கள் புகழ் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே சமயம் கட்சியில் உங்கள் புகழ் குறைந்துக்கொண்டே செல்கிறது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களிடம் சிரித்து பேசினாலும் கூட அவர்கள் உண்மையில் உங்களை முடக்கவே பார்க்கின்றனர்” என கூறியுள்ளார்.
ஆனால் எம்.ஜி.ஆர் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு தி.மு.க கட்சியில் நடந்த பிரச்சனை காரணமாக எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க சென்றார் ஜெய்சங்கர். அப்போது அவரை பார்த்து எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே என்னய்யா ஜெய்சங்கர் நீ சொன்னது மாதிரியே நடந்துருச்சு என கூறியுள்ளார்.
அப்போதுதான் இதுக்குறித்து எம்.ஜி.ஆர் கவலையேபடவில்லை என்பது ஜெய்சங்கருக்கு தெரிந்துள்ளது.
