தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஜப்பான் அனிமே தொடர்களுக்கு அதிக வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் க்ரஞ்சிரோல் என்கிற ஓ.டி.டி தளம் பல ஜப்பான் அனிமேக்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறது.
அப்படியாக க்ரஞ்சிரோலில் வெளியான ஒரு தொடர்தான் Dr.stone. ஏற்கனவே மாங்கா காமிக்ஸாக ஜப்பானில் வெளியாகி பிரபலமடைந்ததை தொடர்ந்து இது இப்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு அனிமே தொடராக வெளிவந்துள்ளது.
கதை சுருக்கம்:
பூமியை சுற்றி திடீரென ஒருநாள் பச்சை நிற கதிர்வீச்சு ஒன்று வீசப்படுகிறது. அது தாக்கிய பிறகு பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும், உயிரினங்களும் சிலையாகி விடுகின்றன. இந்த நிலையில் 3000 வருடங்களுக்கு பிறகு சென்கு என்கிற ஒரு இளைஞன் மட்டும் திடீரென சிலையில் இருந்து மனிதனாக மாறுகிறான்.
அவன் எப்படி மனிதனாக மாறினான் என்பதை தேட துவங்குகிறான். அப்போதுதான் நைட்ரிக் அமிலம் அந்த சிலையின் மீது படும்போது அவர்கள் பழைய நிலைக்கு திரும்புகிறார்கள் என்பது அவனுக்கு தெரிகிறது. சென்கு ஒரு விஞ்ஞானி ஆவான். எனவே கற்காலத்தில் அவன் வாழ துவங்கினாலும் விஞ்ஞானம் மூலமாக 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் பல கண்டுப்பிடிப்புகளை அவன் கண்டுப்பிடிக்கிறான்.

இதற்கு நடுவே பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரையும் கற் சிலையாக்கியது யார் என்கிற தேடலை துவங்குகிறான் செங்கு. அதனை வைத்து கதை செல்கிறது.
இந்த கதையில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சென்கு செய்யும் அறிவியல் ஆராய்ச்சிகள் அனைத்துமே நிஜமான விஷயங்களாக இருக்கின்றன. நிஜ அறிவியலையே கதையில் சரியாக பயன்படுத்தியிருப்பது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்த அனிமேவை பார்க்கும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் வர வாய்ப்புகள் உள்ளன.