News
கணவனை தேடி கோவா சென்ற ஆர்த்தி.. ஹோட்டலில் இருந்து தப்பித்த ஜெயம் ரவி.. நடந்தது என்ன?
சமீபகாலமாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்கும் இடையேவிவாகரத்து குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த விவாகரத்து குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களும் வெளியாகி இருக்கின்றன. ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஒரு சில நாட்களில் ஆர்த்தியும் அதற்கு பதில் அளித்து இருந்தார்.
ஆர்த்தி கொடுத்த தகவல்:
அதில் ஆர்த்தி கூறும் பொழுது தன்னிடம் விவாகரத்து குறித்து ஜெயம் ரவி பேசவே இல்லை. மேலும் சமீபகாலமாக ஜெயம் ரவியை சந்திக்கவே முடியவில்லை என பதிவிட்டிருந்தார். அதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது ஜெயம் ரவி சென்னையில் படபிடிப்புகளில் இருந்த காலகட்டங்களில் கூட அவரது வீட்டில் தங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் ஹோட்டல்களில்தான் தினமும் தங்கி வந்திருக்கிறார். அதேபோல படபிடிப்பு இல்லாத சமயங்களில் கோவாவிற்கு சென்று விடுவாராம் ஜெயம் ரவி. அவரிடம் பட கதை கூற வரும் இயக்குனர்கள் கூட கோவாவிற்குதான் வந்து கதை கூற வேண்டும் என்கிற நிலை இருந்துள்ளது.
கிட்டத்தட்ட இது சில மாதங்களாகவே நீடித்திருக்கிறது. இதை அறிந்து அவரை பார்க்க கோவாவிற்கு சென்று இருக்கிறார் ஜெயம் ரவியின் மனைவி ஆனால் அவர் வருவதை அறிந்து அங்கிருந்தும் தப்பித்து சென்று இருக்கிறார் ஜெயம் ரவி என்று கூறப்படுகிறது.
