News
இதுதான் விவாகரத்துக்கு காரணம்.. வாய்விட்ட ஜெயம் ரவி.. இதை கவனிக்கலையே..!
தமிழ் சினிமாவில் சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் விவாகரத்து ஆகப் போகிறது என்பது ஒரு பேச்சாக இருந்து வந்து கொண்டிருந்தது. இதனை முதன் முதலில் சில youtube சேனல்கள்தான் துவங்கி வைத்தார்.
அதற்குப் பிறகு ஒரு புரளியாக கிளம்பிய இந்த சர்ச்சை தொடர்ந்து நிறைய கதைகளை உருவாக்கி விட்டது. அதில் ஜெயம் ரவி தவறு செய்திருப்பார் என்று ஒரு பக்கமும் ஆர்த்திதான் தவறு செய்திருக்கிறார் என்று இன்னொரு பக்கமும் சர்ச்சைகள் இருந்து வந்தன.
ஆனால் இது குறித்து ஜெயம் ரவியோ அல்லது ஆர்த்தியோ எந்த ஒரு பதிலும் கூறவில்லை என்பதால் பிறகு அதை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் நானும் ஆர்த்தியும் விவாகரத்து செய்யப் போகிறோம் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவி விவாகரத்து:
இதுதான் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்பது பலரது கேள்வியாக இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து அந்த அறிக்கையிலேயே ஜெயம்ரவி தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது இது ஒரு கடினமான முடிவு தான் என்றாலுமே கூட என்னை சுற்றி உள்ளவர்களின் நலனுக்காக நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக ஆர்த்தி செய்யும் சில விஷயங்கள் அவரை சுற்றியுள்ள நபர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று தெரிகிறது. ஆனால் அதில் ஜெயம் ரவியின் குழந்தைகளைதான் அவர் கூறுகிறாரா அல்லது வேறு யாரையும் கூறுகிறாரா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தற்சமயம் இந்த செய்தி ட்ரண்டாகி வருகிறது.
