Connect with us

மனசாட்சி இல்லாமல் விஜய் அந்த முடிவை எடுக்க மாட்டார்!.. தளபதி 69 இயக்குனர் குறித்து மனம் குமுறும் பத்திரிக்கையாளர்!.

rj balaji thalapathy vijay

News

மனசாட்சி இல்லாமல் விஜய் அந்த முடிவை எடுக்க மாட்டார்!.. தளபதி 69 இயக்குனர் குறித்து மனம் குமுறும் பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

Thalapathy 69: விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை விடவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அவர் அடுத்து படங்கள் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்பதுதான் இருக்கிறது.

ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது அவர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றாலும் கூட திரையின் வழியாக விஜய்யை ரசித்து வந்த அவர்களுக்கு திரும்ப அதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்பது மன வருத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருந்து வருகிறது.

Thalapathy-vijay
Thalapathy-vijay

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய். இதற்குப் பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் அதற்குப் பிறகு சினிமாவை விட்டு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.

எனவே அந்த ஒரு திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. கண்டிப்பாக அந்த திரைப்படம் அரசியல் சார்ந்த ஒரு திரைப்படமாகதான் இருக்கும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் அரசியலுக்கு வந்துள்ள விஜய் அதை பேசும் வகையிலேயேதான் இறுதி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசி திரைப்படம்:

எனவே கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் இப்படி பல இயக்குனர்கள் தளபதி 69 படத்தின் இயக்குனர்கள் என்று பேச்சுக்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக ஆர்.ஜே பாலாஜிதான் விஜயின் 69 ஆவது திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் வரத்துவங்கின.

அதற்கு தகுந்தார் போல ஆர்.ஜே பாலாஜியும், எல்கேஜி ,மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் அரசியல் ரீதியாக நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அந்த படங்களின் திரைக்கதையிலும் ஆர்.ஜே பணியாற்றியிருந்தார்.

மேலும் ஆர்.ஜே பாலாஜி பேட்டியில் கூறும் பொழுது விஜய்க்கு ஒரு கதை கூறியதாகவும் அதை விஜய்க்கு பிடித்திருந்தும் அப்பொழுது வீட்ல விசேஷம் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்ததால் விஜயின் படத்தை இயக்க முடியாமல் போனதாகவும் கூறி இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

இதற்கு நடுவே இது குறித்து பேசும் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறும் பொழுது விஜய் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் படம் நடிப்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. மனசாட்சியே இல்லாமல் இப்படியெல்லாம் புரளியை கிளப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

To Top