Connect with us

வாய்க்கு வந்த மாதிரி பேசலாம்.. ஆனால் செயல்ல எதுவும் இல்ல!.. விஜய்யை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்!..

k rajan vijay

Cinema History

வாய்க்கு வந்த மாதிரி பேசலாம்.. ஆனால் செயல்ல எதுவும் இல்ல!.. விஜய்யை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்!..

Social Media Bar

Actor Vijay :  சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், திரையரங்க விநியோகஸ்தருமான கே.ராஜன் விஜய்யை விமர்சித்து ஒரு சில விஷயங்களை பேசியிருந்தார்.

ஒரு நடிகர் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரசிகர்களே என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. அப்படி வளரும் நடிகர்கள் பலரும் ரசிகர்களுக்கு எந்த நல்லதும் செய்வதில்லை. அந்த வகையில் விஜய்யும் கூட தனது ரசிகர்களுக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை என்பதே ராஜனின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

vijay
vijay

இதுக்குறித்து அவர் கூறும்போது ”எந்த ஒரு நடிகனும் தனது ரசிகர்களை மதிக்க வேண்டும். அப்படி அவர்களை மதிக்க தவறினால் அவர்களும் உன் படத்திற்கு எதற்கு நாங்கள் திரையரங்கிற்கு வரவேண்டும் என யோசிக்க துவங்கிவிடுவார்கள். அப்படி அவர்கள் யோசிக்க துவங்கிவிட்டால் அதன் பிறகு வெகுநாட்கள் நீங்கள் சினிமாவில் இருக்க முடியாது.

லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் பேசும்போது ரசிகர்கள் என்மீது கொண்ட அன்பிற்கு என் தோலை வைத்து அவர்களுக்கு செருப்பை தைத்து போட்டாலும் பத்தாது என கூறியிருந்தார். இந்த மாதிரி நடக்காத விஷயங்களை பேசுவதற்கு பதிலாக உபயோகமாக ஏதாவது செய்யலாம்.

vijay1
vijay1

6 மாதங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு விருந்து வைக்கலாம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இதையெல்லா செய்தாலே ஒரு ரசிகன் மிகுந்த சந்தோஷம் அடைவான் என கூறியுள்ளார். அவர் கூறுவதும் ஒரு வகையில் சரிதானே என நெட்டிசன்கள் இதற்கு பதிலளித்து வருகின்றனர்.

To Top