Anime
டீமன் ஸ்லேயர் – கிமட்சு நோ எய்பா- ககயா உபயாஸ்கி
டீமன் ஸ்லேயர் தொடரில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் முக்கியமானவர் ககயா யுபயாஸ்கி. டீமன் ஸ்லேயர் காப்ஸின் 97 ஆவது தலைவராக இவர் அறியப்படுகிறார். டீமன் ஸ்லேயர் காமிக்ஸில் இவர் சாப்டர் 46 இல் முழுமையாக அறிமுகம் ஆகிறார்.
பெயர்: ககயா உபயாஸ்கி
இனம்: மனிதன் / ஆண்
வயது : 23
தலைமுடி நிறம்:கருப்பு
கண் நிறம்: லாவண்டர்
வேலை: உபயாஸ்கி குடும்பத்தின் தலைமை பொறுப்பு:
சொந்தங்கள்:
- அமானே உபயாஸ்கி (மனைவி)
- ஹினாகி உபயாஸ்கி (மகள்)
- நிச்சிக்கா உபயாஸ்கி (மகள்)
- கிரியா உபயாஸ்கி (மகன்)
- குய்னா உபயாஸ்கி (மகள்)
- கனட்டா உபயாஸ்கி (மகள்)
- முகன் கிபுட்சுஜி (தூரத்து சொந்தம்)
ககயா உபயாஸ்கி ஒரு நடுத்தர உயரமுள்ள மனிதனாக இருக்கிறார். யாரால் டீமன் ஸ்லேயர் காப் ஆக முடியும் என்பதை இவரே முடிவு செய்கிறார். டாஞ்சிரோவில் துவங்கி பலரை இவர்தான் டீமன் ஸ்லேயர் காப்பில் சேர்த்துள்ளார்.
ஆனால் இவருக்குள் இருக்கும் சாபம் மெல்ல மெல்ல இவரை கொன்று கொண்டுள்ளது. இதனால் இவரது தலையின் பாதி நிறம் மாறியிருக்கிறது. நரம்புகள் வெளியே தெரிகின்றன. இந்த நிறம் மாற்றம் அவரது உடல் முழுக்க பரவும்போது அவர் இறந்துவிடுவார் என கூறப்படுகிறது.
கதாபாத்திரம்:
முன்பே சொன்னது போல டீமன் ஸ்லேயர்களின் தலைவராக இவர் பார்க்கப்படுகிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் சரியான முடிவுகளை எடுப்பவராக இவர் இருக்கிறார். டாஞ்சிரோவை முதன் முதலாக இவர் பார்க்கும்போது அவன் டீமனாக மாறிய தனது தங்கையோடுதான் வருவான். இருந்தாலும் கூட எந்த ஒரு தயக்கமும் இன்றி அவனை டீமன் ஸ்லேயர் காப்ஸில் சேர்த்துவிடுகிறார் ககயா.
டீமன் ஸ்லேயர்களை தனது பிள்ளைகள் போலவே கருதுகிறார் ககயா. டீமன்களோடு நடக்கும் போரில் பல டீமன் ஸ்லேயர்கள் இறப்பதுண்டு. அவர்களது கல்லறைக்கு தினமும் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ககயா.
சிறப்பு சக்தி:
டீமன் ஸ்லேயர் சீரிஸை பொறுத்தவரை பெரிதாக அவரது சிறப்பு சக்தி குறித்து தெரியவில்லை. ஆனால் கண் தெரியாவிட்டாலும் கூட டீமன்கள் மற்றும் மனிதர்களை அவரால் அடையாளம் காண முடியும். ஆனால் காமிக்ஸின் படி தனது அமைதியான முகத்தையே ஆயுதமாக பயன்படுத்துகிறார் ககயா என கூறப்படுகிறது.
ககயாவிற்கு ஆங்கிலம் மற்றும் ஜாப்பனிஸில் செய்ஜிரோ கிகுஒகா என்பவர்தான் டப்பிங் அளித்து வருகிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்