என்னை மணல் கொள்ளை பத்தி படம் எடுக்க சொன்னாரு கலைஞர்!.. ஓப்பனாக கூறிய கமல்..

தமிழ் திரைப்பட நடிகர்களின் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து இப்போது வரை டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருந்துள்ளன. ஆளவந்தான், குணா, அன்பே சிவம் போன்ற பல திரைப்படங்களில் கமல்ஹாசனின் புது வகையான நடிப்புகளை காண முடியும்.

அப்படி தமிழ் சினிமாவில் புதுப்புது முயற்சிகளை கையாண்ட கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் தசாவதாரம். தசாவதாரம் திரைப்படத்தில் மொத்தம் பத்து கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் குறித்து பேட்டியில் கூறும் பொழுது அதில் ஒரு கதாபாத்திரம் சதுப்பு நிலக் காடுகள் அழிவதற்கு எதிராக போராடுவது போல உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த கதையை கேட்ட கலைஞர் இது மக்களுக்கு புரியாது எனவே நீ மணல் கொள்ளையை எதிர்த்து போராடுவது போல அந்த கதாபாத்திரத்தை மாற்றி அமைத்து விடு என்று கூறினார். அவர் சொன்னது போலவே மாற்றி அமைத்தது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது என கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.