Connect with us

டூப்பு போடாம நானே நடிக்கிறேன்.. முகத்தில் பேட்ஜ் ஒர்க் வாங்கிய ஆண்டவர்!..

actor kamalhaasan

Cinema History

டூப்பு போடாம நானே நடிக்கிறேன்.. முகத்தில் பேட்ஜ் ஒர்க் வாங்கிய ஆண்டவர்!..

Social Media Bar

Actor Kamalhaasan : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். சாதரணமாக சில நடிகர்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்.

ஆனால் கமல்ஹாசனை பொறுத்தவரை புதிய புதிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கக்கூடியவர். தொடர்ந்து குணா, ஆளவந்தான் மாதிரியான வித்தியாசமான திரைப்படங்களில் நடித்தார் கமல்ஹாசன். சில திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் கூட டூப் போடாமல் நடிக்க கூடியவர் கமல்ஹாசன்.

அப்படியாக கமல்ஹாசன் அவர் நடித்த சகலகலா திரைப்படத்தில் நடித்தப்போது ஒரு பாடல் காட்சியில் ஸ்டண்ட் காட்சிகளை செய்து அதனால் முகத்தில் அடி வாங்கினார் கமல்ஹாசன்.

சகலகலா திரைப்படத்தில் இளமை இதோ இதோ பாடலில் முதலில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கமல் வருவது போன்ற காட்சி இருக்கும். அந்த காட்சியில் டூப் போட்டு நடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார் இயக்குனர்.

ஆனால் கமல் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நானே அந்த காட்சியை நடிப்பேன் என கூறிய கமல், கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போது ஒரு கண்ணாடி அவரது முகத்தில் பதம் பார்த்தது. இதனால் முகத்தில் கடுமையான வெட்டு ஏற்பட்டது.

இந்த நிலையில் முகத்தில் தையல் போட்டால் சரி வராது அது தழும்பாகிவிடும் என அவரை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top