நடித்த படத்திற்கு டப்பிங் செய்வதற்கு மறுத்த கமல்ஹாசன்!.. ட்ரிக் செய்து எடிட்டர் செய்த சம்பவம்!..

Kamalhaasan : தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். தனது சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்த கமல்ஹாசன் இளம் வயதில் பெரும் நடிகரானார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவிற்கு ரஜினிகாந்த் வருவதற்கு முன்பே இங்கு பெரிய நடிகராக இருந்தவர் கமல்ஹாசன்.

சிறு வயது முதலே அவருக்கு நடிப்பின் மீது தான் ஆர்வம் இருந்தது. அதனால் படிப்பில் கூட பெரிதாக ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சிகளை மட்டுமே எடுத்து வந்தார். இதற்கு நடுவே நடனம் ஆடுவது சண்டை பயிற்சி என்று சினிமா துறையில் உள்ள மற்ற துறைகளிலும் பயிற்சி பெற்று வந்தார் கமல்ஹாசன்.

Social Media Bar

அதனால்தான் எதிர்காலத்தில் அவரால் திரைப்படம் இயக்குதல் பாடல் பாடுதல் என்று பல விஷயங்களை செய்ய முடிந்தது. பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்த பிறகு அந்த திரைப்படம் தமிழில் பெரும் வெற்றியை கண்டது.

அதனை தொடர்ந்து அதை தெலுங்கில் டப்பிங் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த டப்பிங் செய்வதற்கான முழு பொறுப்பையும் அப்போது இருந்த எடிட்டர் மோகனிடம்  ஒப்படைத்தார்  தயாரிப்பாளர். இந்த நிலையில் தமிழில் யார் அந்த படங்களுக்கு டப்பிங் செய்தார்களோ அவர்களையே வைத்து தெலுங்கிலும் டப்பிங் செய்தார் எடிட்டர் மோகன்.

ஆனால் கமல்ஹாசன் மட்டும் இந்த டப்பிங்க்கு வர மறுத்துவிட்டார் அவருக்கு நிறைய வேலை இருப்பதாகவும் அதனால் வேறு ஆளை வைத்து டப்பிங் செய்து கொள்ளவும் என்றும் கூறிவிட்டார் கமல்ஹாசன். இந்த நிலையில் கமலுக்காக டப்பிங் செய்ய வந்த ஆள் ஒழுங்காக டப்பிங் செய்யவில்லை எனவே அது எடிட்டர் மோகனுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவரை அனுப்பிவிட்டு பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தை அழைத்தார்.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் சிறப்பாக டப்பிங் செய்யக்கூடியவர். எனவே அவரை அழைத்து கமலுடைய கதாபாத்திரத்திற்கு நீங்கள்தான் டப்பிங் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் எடிட்டர் மோகன். அதனை அப்படியே கேட்டுக் கொண்ட எஸ்பிபி மிகவும் சிறப்பாக அந்த படத்தில் டப்பிங் செய்து இருக்கிறார் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் எடிட்டர் மோகன் கூறி இருக்கிறார்.