Connect with us

கமல் பட வேலையில் பிஸியான ஹெச்.வினோத்! – அடுத்தக்கட்ட வேலைகள் துவக்கம்!

News

கமல் பட வேலையில் பிஸியான ஹெச்.வினோத்! – அடுத்தக்கட்ட வேலைகள் துவக்கம்!

Social Media Bar

தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் ஹெச்.வினோத். முதன் முதலாக ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டையில் துவங்கி தற்சமயம் வந்த துணிவு திரைப்படம் வரை அனைத்து படங்களுமே முக்கியமான ஒரு விஷயத்தை கருவாக கொண்டு தயாராகின்றன.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார் ஹெச்.வினோத். ஆனால் துணிவு திரைப்படத்தின் வேலைகள் முடிவதற்கு நாட்கள் இழுக்கவே விஜய் சேதுபதி ஹெச்.வினோத்திற்கு ஒதுக்கிய தேதியை வேறு இயக்குனருக்கு கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் ஹிட்டை தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருந்த நடிகர் கமல், ஹெச்.வினோத்தை சந்தித்து பேசினார். பிறகு இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என முடிவானது.

கமலும் மணிரத்னம், வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகிய இயக்குனர்களிடம் ஏற்கனவே பேசி இருந்தார். ஆனால் அவர்கள் அனைவரும் பிஸியாக இருக்கும் காரணத்தினால் தற்சமயம் ஹெச்.வினோத்தோடு படம் செய்ய முடிவாகியுள்ளது.

படத்திற்கான திரைக்கதை வேலையில் மும்மரமாக ஈடுப்பட்டுள்ளார் ஹெச்.வினோத். விரைவில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இனி பெரும் கதாநாயகர்களை வைத்து மட்டுமே திரைப்படம் இயக்க உள்ளேன் என கூறியுள்ளார் ஹெச்.வினோத்.

இதனால் விஜய், ரஜினி போன்ற நடிகர்களுடன் கூட இவர் படம் இயக்கலாம் என பேச்சுக்கள் உள்ளன.

To Top