Connect with us

அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கமிட் ஆகும் கமல்! – இந்த இயக்குனருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு

Latest News

அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கமிட் ஆகும் கமல்! – இந்த இயக்குனருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு

cinepettai.com cinepettai.com

நடிகர் கமல் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, திரும்பவும் தமிழ் சினிமாவிற்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. 

கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரிசையாக இளம் இயக்குனர்களிடம் கமிட் ஆகி வருகிறாராம் கமல்.

கமல் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அதற்கு முன்பே இயக்குனர் வெற்றி மாறன், மற்றும் ரஞ்சித் ஆகியோரிடம் பேசியிருந்தார் கமல். அவர்கள் இயக்கும்  படத்தில் நடிப்பதற்கு கமல் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஹெச்.வினோத்திடமும் கூட படம் நடிப்பது குறித்து பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹெச்.வினோத் படத்தில் கமல் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன.

சதுரங்க வேட்டை திரைப்படத்தை போல ஒரு ஆண்டி ஹீரோ கதாபாத்திரம் கொண்ட கதையை கமல் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top