லவ் டுடே படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோதானா? – ப்ரோடியசர் காட்டுல மழைதான்!

திரையரங்குகளில் வெளியான நாள் முதல் இன்று வரை எதிர்பார்க்காத அளவில் மகத்தான வெற்றி அடைந்த திரைப்படம் லவ் டுடே.

இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். ஏற்கனவே இவர் நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற படத்தை இயக்கியிருந்தார். லவ் டுடே இவருக்கு இரண்டாவது படமாகும். 

இந்த படம் அவர் ஏற்கனவே எடுத்த குறும்படத்தின் கதையாகும். படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என அவரே அந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார். இரண்டு பாடல்களையும் யுவன் பாடியுள்ளார்.

கல்பாத்தி நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்நிலையில் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு? என பார்க்கும்போது வெறும் 5 கோடியில் மொத்த படத்தையும் எடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. தற்சமயம் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களே இதை விட அதிகமாக வாங்கும்போது பிரதீப் இவ்வளவு குறைவான செலவில் ஒரு வெற்றி படத்தை எடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என பலரும் வியக்கின்றனர்.

படம் வெளியான முதல் நாளே இந்த படம் 2.5 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் படம் செய்யும் அதிக வசூல் கல்பாத்தி நிறுவனத்திற்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பிரதீப் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அடுத்தடுத்த படங்களிலும் கூட அவரே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Refresh