மரியான் படத்துலயே சிவகார்த்திகேயனுக்கு சீன் வச்சேன் – தனுஷ் வெளியிட்ட தகவல்.!

சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு முழுவதும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். சிவகார்த்திகேயனின் முதல் படம் துவங்கி மான் கராத்தே திரைப்படம் வரை அவரது திரைப்படங்களில் தனுஷின் பங்களிப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தது என கூறப்படுகிறது.

ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் அந்த நிலையில் இருந்த நட்பு காலப்போக்கில் விரிசல் அடைந்து தற்சமயம் இருவரும் இருவேறு துருவங்களாக மாறிவிட்டனர்.

இவர்கள் இருவரும் நட்பாக இருந்தபோது பல இடங்களில் ஒன்றாக பேட்டி கொடுத்துள்ளனர். அப்படியாக ஒரு பேட்டியில் பேசும்போது தனுஷ் ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதாவது மரியான் படத்தில் அவர் சிவகார்த்திகேயனை குறிப்பிடும் ஒரு காட்சியை வைத்திருந்தாராம்.

ஒரு காட்சியில் சினிமா கிசு கிசுப்பை தனுஷ் படித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி வரும். அந்த காட்சியில் தனுஷ் படிக்கும்போது “அப்பா மகன் பெயர் கொண்ட நடிகர் பூ நடிகையுடன் காதலா?” என படித்துக்கொண்டிருப்பார். அதில் அந்த அப்பா மகன் நடிகர் சிவகார்த்திகேயன்தானாம். சிவன், முருகன் என இருவரின் பெயரையும் கொண்டுள்ளார் என்பதால் அவரது பெயரை குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.

இந்த நிகழ்வை தனுஷே அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நான் என்றைக்குமே சிவகார்த்திகேயன் மீது கோபப்பட மாட்டேன் என கூறியுள்ளார் தனுஷ். ஆனால் அப்படி நட்பாக இருந்தவர்கள் தற்சமயம் பிரிந்துள்ளனர் என்பது வருத்தமான விஷயமாகும்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh