Cinema History
மேடையில் வைத்து முத்தம் கேட்ட நம்பியார் – கொடுக்க மறுத்த எம்.ஜி.ஆர்!
1987 ஆம் ஆண்டு சத்யராஜ் மற்றும் சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடித்து வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இந்த படம் வெளியாகி 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி ஹிட் அடித்தது.

எனவே இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் நடிகரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் கலந்துக்கொண்டார். சத்யராஜ் எம்.ஜி,ஆரின் மிகப்பெரும் ரசிகர் என்பதும் இதற்கு காரணமாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் அந்த விழாவில் கலந்துக்கொண்டு எம்.ஜி.ஆருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி வந்தனர். அதன் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கூட எம்.ஜி,ஆருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனின் கன்னத்தில் முத்தமிட்டார்.
சிவாஜிக்கு பிறகு நடிகர் நம்பியார் மேடைக்கு வந்தார். அவர் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்திய பிறகு சிவாஜிக்கு முத்தம் கொடுத்தாய், அதுப்போல எனக்கு முத்தம் கொடு என கேட்டார். உடனே எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே அதெல்லாம் உனக்கு கொடுக்க முடியாது என கூறிவிட்டு, பிறகு முத்தம் கொடுத்து அனுப்பினாராம்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் மூவரையும் வெளி உலகம் விரோதிகள் போலவும், போட்டி போட்டு கொள்பவர்கள் என்றும் நினைத்துக்கொண்டிருந்தாலும் உண்மையில் அவர்கள் நண்பர்களாகவே இருந்துள்ளனர் என்பது இந்த நிகழ்வின் மூலம் தெரிகிறது.
