Latest News
விலகிய கமல்ஹாசன்.. இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் பிரச்சனை.. தனுஷ்தான் காரணமா?.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் உருவாக இருந்த திரைப்படம் இளையராஜா.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருந்தது ஆனால் ஒரே சமயத்தில் தனுஷ் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருந்ததால் இளையராஜாவின் கதையானது படமாக்கப்பட துவங்கவே இல்லை.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்கான வேலை கமல்ஹாசனிடம் வழங்கப்பட்டது. கமலஹாசனும் ஆரம்பத்தில் இந்த வேலைகளை துடிப்புடன் துவங்கினார். ஆனால் இன்னமும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகி இருக்கிறார் கமல்ஹாசன்.
விலகிய கமல்ஹாசன்:
நடிகர் தனுஷ் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் அனைத்து திரைப்படங்களையும் நடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு உருவாகி இருக்கிறது. இதனால் இவை அனைத்தையும் முடிக்கும் வரை அவர் இளையராஜா திரைப்படத்தில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்த தாமதத்தினால்தான் கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இளையராஜா படமே நின்று விடும் சூழ்நிலை இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதிகமாக எதிர்பார்த்த ஒரு திரைப்படமாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது.
அதே மாதிரி நடிகர் தனுஷும் தனது வாழ்நாளில் இளையராஜா மற்றும் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய பெரிய ஆசை என்று கூறி இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது தனுஷ் சாமானியமாக இந்த படத்தை விட்டு விட மாட்டார் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.